Sunday 5th of May 2024 02:56:16 PM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனாவில் இருந்து   முற்றாக மீண்டது நியூசிலாந்து!

கொரோனாவில் இருந்து முற்றாக மீண்டது நியூசிலாந்து!


நியூசிலாந்து கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து முற்றிலுமாக மீண்டுள்ளதாக அந்நாட்டுப் பிரதமா் ஜசிந்தா ஆர்டெர்ன் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளாா்.

நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட கடைசி நபரும் குணமடைந்துள்ளதை அடுத்து அவா் இந்த அறிவிப்பை வெளியிட்டாா்.

இதனையடுத்து கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகளை இன்று திங்கட்கிழமை முதல் தளா்த்துவதாகவும் நியூசிலாந்து பிரதமா் கூறினாா்.

சுமார் 50 இலட்சம் மக்கள் வசிக்கும் நியூசிலாந்தில், 1,154 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 22 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 17 நாட்களாக அந்நாட்டில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஒரே ஒருவருக்கு மட்டுமே தொற்று இருந்தது. அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இறுதியாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்த நபர் குறித்த விவரங்கள் அவரது தனியுரிமை காரணமாக வெளியிடப்படவில்லை. ஆனால், அவர் 50 வயது மதிக்கத்தக்க பெண் என்றும், ஆக்லாண்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த கடைசி நோயாளிக்கு கடந்த 48 மணி நேரம் தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லை. அவர் தற்போது தனிமைப்படுத்தப்படவில்லை என நியூசிலாந்து சுகாதாரத் துறையினர் அறிவித்துள்ளனா்.

இதனையடுத்தே வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக நியூசிலாந்தின் பிரதமர் ஜாசிந்தா அர்டெர்ன் இன்று அறிவித்தாா்.

கடந்த சில வாரங்களாக நியூசிலாந்து மக்கள் செய்த தியாகத்தால்தான் இந்தப் போராட்டத்தில் வெற்றி காண முடிந்தது. நியூசிலாந்து கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டது. நாட்டில் ஒரு தொற்று நோயாளரும் இல்லை என்ற செய்தி வந்தவுடன் என் குழந்தையோடு நான் நடனமாடி அதைக் கொண்டாடினேன் எனவும் அவா் கூறினாா்.

எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் நியூசிலாந்தின் பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெரும். தற்போதைக்கு உலக அளவில் அதிக தளர்வுகள் அளித்துள்ள நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று எனவும் அவா் தெரிவித்தாா்.

தற்போது தளர்த்திய கட்டுப்பாடுகள் மூலம் இரவு விடுதிகள் உள்ளிட்ட கேளிக்கை விடுதிகள் திறக்கப்படும். சினிமா தியேட்டர்களும் மீண்டும் திறக்கப்படும். அதேபோல அனைத்து விளையாட்டுத் தொடர்களும் எந்தவித கட்டுப்பாடுமின்றி நடக்கும்.

உலகில் பல நாடுகள் விளையாட்டுத் தொடர்களை விரைவில் நடத்த இருந்தாலும், ரசிகர்கள் இல்லாமலேயே அதை நடத்த திட்டமிட்டுள்ளன. ஆனால் நியூசிலாந்தில் அப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கப் போவதில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தொற்று நோய் நாட்டிலிருந்து முற்றாகி ஒழிக்கப்பட்டுள்ளது என்பது எங்களுக்குக் கிடைத்திருக்கக் கூடிய மிக மகிழ்ச்சியான செய்தியாகும். இந்த செய்தியை மொத்த நியூசிலாந்தும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்ளலாம் என நியூசிலாந்து சுகாதார சேவைகள் பணிப்பாளா் ஆஷ்லி ப்ளூம்ஃபீல்ட் கூறினாா்.

பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்குப் பின்னர் இப்போதுதான் எங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளா் ஒருவா் கூட இல்லை என்ற நிலை வந்துள்ளது. இது கொரோனாவுக்கு எதிரான எங்கள் போராட்டத்தில் மிக முக்கியமான மைல்கல் ஆகும். அதே நேரத்தில் கோவிட்-19 தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும். தற்போதைய சூழலில் அது மிக முக்கியமாகும் என்றும் அவா் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), நியூசிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE